Category Archives: Uncategorized

அன்பேயுருவாய் மாறி, அன்பைப் பொழியுங்கள்

ஆயிரம் காரணங்களைக் கொண்டு முரிந்ததொரு காதல்.
ஒரே காரணத்தைக் கொண்டு சேர்ந்ததொரு காதல்.

அங்கம், பங்கம், சொந்தமென.. சொத்து-பத்துப், பொருளென.. மயிர், மட்டு, மடுவென.. நீள்வதென்ன காரணங்கள்..

அழுகி மட்கப் போகுமொரு பொருளுக்கான வேஷங்கள்.

பாறையிடுக்குகளில் ஊறும் ஊற்றாக.. அன்பூறும் இதயம் மனிதனது.. அது அவனியல்பு.

இயல்பு மாறி.. காரணங்களைக் கொண்டதென்னக் கருமம்!

காரண, காரியங்களுக்கான காதல் நிகழில் (காலம்) கரைகிறது.
காலம் கடக்கும் காதலானது பால்வெளியில் திரள்கிறது.

எதிர்பார்ப்பில்லாத காதலை தேடியலையும் ஜனம்.
எதிர்பாராது காதலை வெளிக்கொணர தவறுகிறது.

சூரிய குடித்தனங்களே.. அன்பைப் பொழியுங்கள்..
பாரபட்சமின்றி ஒளி படரச்செய்து வாழ்வளிக்கும் சூரியனைப் போல.

Advertisements

நீ என்ன பெரிய கொக்கா?

எத்தனையோ பேர் இந்த கேள்வி கேட்டும், திடீர்னு ஒரு யோசனை, ஏன் இப்படி கேக்குறாங்க’னு.. இந்த பாட்டு கேட்டு இருக்கீங்களா? ‘பாண்டியனா கொக்கா.. கொக்கா..’

’நீ என்ன பெரிய கொக்கா?’ என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே இடம். ‘நாங்க என்ன கொக்கா?’ என்று சொல்லியும் சிலர் சண்டையிடுவதுண்டு. இங்கே பொருந்துவது கொக்கு as a symbol of naivety. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடித்தல் என்பதிலிருந்து வந்தது.

கொக்கு - Crane

சொல்லப்படும் கதை:

ஒருவன் கொக்கு பிடிக்க போனான். கொக்கு வந்து உட்கார்ந்தது. ஆனால் பிடிக்கவில்லை.

துணைக்குச் சென்றவன்: “ஏண்ணே பிடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று கேட்க, இவன், ‘அட மடையா.. கொக்கு பறந்தோடிவிடும்’ என்றான்!”.

பின் எப்படித்தான் பிடிப்பதாக உத்தேசம்?

நான் கொக்கு தலைமேல் வெண்ணெயை வைப்பேன். அது உருகி வழிந்து கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது, அதை “லபக்கென்று பிடிப்பேன்” என்றானாம்.

இதில் இரு விதமான கருத்துக்கள் உண்டு.

ஒன்று இவன் மடையன், மற்றொன்று, கொக்கு ஒரு மடைமையுடைய பிராணி என்ற மரபு நம்பிக்கை. கொக்கு – A symbol of idiocy / naivety. இதை மூட நம்பிக்கை எனலாம் (as there is no scientific evidence for this). எனவே, ‘என்னைய என்ன கொக்குன்னு நெனச்சியா’?

இப்டி சொன்னா..

என்னை கொக்கைப் போல ஒரு மடைமையுடையவன் என நினைத்தாயோ? என்று பொருள்.

ஓர் உரையாடல் இப்படி..

”நீ என்ன பெரிய கொக்கா?”

”சரி, வேண்டாம்; சின்ன கொக்கு! போதுமா?”

இனிமே கொக்கு’ன்னா யாரு ஞாபகத்துக்கு வருவா..? அப்படி ஞாபகத்துக்கு வந்தாலும் அவா கொக்கு கெடையாது.. ஹா.. ஹா.. 🙂

Corporate Slavery

Corporations are dictatorships; they are full of power-hungry technocrats who will destroy anything for more profits, power, market-share.

Corporations have an explicitly fascistic agenda; they want to control global natural and ‘human’ resources. The corporate doctrine thrives on the destruction of social solidarity, on individualistic vanity and narcissism. Corporations are machines of mass destruction; they are blind monsters that search for profits through any means available to them.

Corporate Slavery: No more than a new method of slavery that is even more profitable for the ruling class. Corporations poison the minds of the populace with false televised dreams. Corporations use patriotism in their advertising campaigns to promote violent militaristic sentiments; yet they pay no taxes!

Corporate executives exercise complete control over political officials from every single level of governments. All corporations must be seized or they will always find a way to subvert the voice of the people, the will of the masses! Corporations must be seized by the workers or they will continue to terrorize the workers. Corporate executives use their financial influence to persuade government officials to shut down any anti-corporate policies.

60,000 people starved to death yesterday and the gap between the first world and third world continues to get wider. All corporations must be seized by a force of organized workers who are fed up with living the lives of sheepish wage-slaves.