நீ என்ன பெரிய கொக்கா?

எத்தனையோ பேர் இந்த கேள்வி கேட்டும், திடீர்னு ஒரு யோசனை, ஏன் இப்படி கேக்குறாங்க’னு.. இந்த பாட்டு கேட்டு இருக்கீங்களா? ‘பாண்டியனா கொக்கா.. கொக்கா..’

’நீ என்ன பெரிய கொக்கா?’ என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே இடம். ‘நாங்க என்ன கொக்கா?’ என்று சொல்லியும் சிலர் சண்டையிடுவதுண்டு. இங்கே பொருந்துவது கொக்கு as a symbol of naivety. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடித்தல் என்பதிலிருந்து வந்தது.

கொக்கு - Crane

சொல்லப்படும் கதை:

ஒருவன் கொக்கு பிடிக்க போனான். கொக்கு வந்து உட்கார்ந்தது. ஆனால் பிடிக்கவில்லை.

துணைக்குச் சென்றவன்: “ஏண்ணே பிடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று கேட்க, இவன், ‘அட மடையா.. கொக்கு பறந்தோடிவிடும்’ என்றான்!”.

பின் எப்படித்தான் பிடிப்பதாக உத்தேசம்?

நான் கொக்கு தலைமேல் வெண்ணெயை வைப்பேன். அது உருகி வழிந்து கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது, அதை “லபக்கென்று பிடிப்பேன்” என்றானாம்.

இதில் இரு விதமான கருத்துக்கள் உண்டு.

ஒன்று இவன் மடையன், மற்றொன்று, கொக்கு ஒரு மடைமையுடைய பிராணி என்ற மரபு நம்பிக்கை. கொக்கு – A symbol of idiocy / naivety. இதை மூட நம்பிக்கை எனலாம் (as there is no scientific evidence for this). எனவே, ‘என்னைய என்ன கொக்குன்னு நெனச்சியா’?

இப்டி சொன்னா..

என்னை கொக்கைப் போல ஒரு மடைமையுடையவன் என நினைத்தாயோ? என்று பொருள்.

ஓர் உரையாடல் இப்படி..

”நீ என்ன பெரிய கொக்கா?”

”சரி, வேண்டாம்; சின்ன கொக்கு! போதுமா?”

இனிமே கொக்கு’ன்னா யாரு ஞாபகத்துக்கு வருவா..? அப்படி ஞாபகத்துக்கு வந்தாலும் அவா கொக்கு கெடையாது.. ஹா.. ஹா.. 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s